நேற்று (15) நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 40 நாட்களில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையானது 2,849 நிலையங்களில் நடைபெற்றதுடன் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.