தேற்றாத்தீவு மயானத்தில் நரபலியா; பொலிஸார் குழப்பம்!

0
173

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு நரபலி பூஜைகள் எதுவும் நடாத்தப்பட்டதா? என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மற்றும் குற்றத்தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலம் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதனால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.