சஜித்தின் பிரச்சார கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார்களுக்கு ஏற்பட்ட நிலை! எழுந்துள்ள சர்ச்சை

0
95

வவுனியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பிரச்சாரக் கூட்டத்தில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மத குருமார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அவர்களின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்றையதினம் (03-09-2024) வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின் பிரதான மேடையில் மதத்தலைவர்ககளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டு அவர்களும் அமர்ந்திருந்தனர்.

மேலும், பொதுக் கூட்டத்தில் மூவினங்களையும் சேர்ந்த 4 மதங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்ட போதும் பௌத்த மதகுரு, இந்து மதகுரு, கிறிஸ்தவ மதகுரு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவர்கள் எவரும் பிரதான மேடையில் காணப்படவில்லை.

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 6 மௌலவிகள் வரவழைக்கப்பட்டு அவர்கள் மதத்தலைவர்கள் அமரும் இடத்தில் இருந்ததுடன், ஒரு மௌலவி உரையாற்றியும் இருந்தார்.

இருப்பினும், ஏனைய மதத் தலைவர்கள் அழைக்கப்படவில்லை என அங்கு கலந்து கொண்டு ஏனைய மதங்களைச் சேர்ந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.