உலகின் வயதான பெண் காலமானார்: கின்னஸில் இடம் பிடித்த ஜப்பான் மூதாட்டி

0
134

உலகின் மிக வயதான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த மரியா பிரான்யாஸ் தனது 117 ஆவது வயதில் உயிரிழந்தார். அமெரிக்காவில் பிறந்த மரியா பிரான்யாஸ் இரண்டு உலகப் போர்களைப் பார்த்துள்ளதுடன், ஸ்பெயின் உள்நாட்டுப் போர் மற்றும் 1918 ஆம் ஆண்டு பெரிய அளவில் பரவிய காய்ச்சல், கொவிட் தொற்று ஆகியவற்றையும் பார்த்துள்ளார்.

இவர் 1907 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். வடகிழக்கு ஸ்பெயினில் உள்ள ஓலோட் நகரில் சாண்டா மரியா என்ற முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் (ஓகஸ்ட் 20) காலமானார்.

உலகின் மிக வயதான பெண்மணியான மரியா பிரன்யாஸ் உயிரிழந்ததை அடுத்து ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 116 வயது மூதாட்டியான தொமிக்கோ இதூக்கா [Tomiko Itooka] உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் புத்தக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

1908 ஆம் ஆண்டு மே 23 இல் இதூக்கா பிறந்துள்ளார். இதூக்கா இளமைக்காலங்களில் மலையேற்ற வீராங்கனையாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.