கொழும்பு வந்தது அமெரிக்க கடற்படை கப்பல்: இலங்கை கடற்படையினர் சிறப்பு வரவேற்பு

0
156

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ் கப்பல் மீள்நிரப்பும் விஜயமாக இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்நிலையில், குறித்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் வரவேற்றிருந்தனர்.

யுஎஸ்எஸ் ஸ்ப்ரூன்ஸ், 160 மீட்டர் நீளம் கொண்டதுடன், 338 பணியாளர்களைக் கொண்ட குழுவினரால் இயக்கப்படுகிறது. கொமாண்டர் தாமஸ் ஆடம்ஸ் தலைமையில் கப்பல் இயங்குகின்றது.

எவ்வாறாயினும், மீள்நிரப்பும் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த கப்பல் நாளை நாட்டில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.