பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனை ஊழியர்: வெளியான வீடியோவால் பரபரப்பு!

0
124

இந்தியா உத்தரப் பிரதேச மாநிலம், பஸ்தி மாவட்டம், ஹர்தயா பகுதியில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனையொன்றில் பெண் ஒருவருக்கு மருத்துவமனை ஊழியர் (Ward boy) அறுவை சிகிச்சை செய்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிகிச்சை நடைபெறும் அறை (Operation Theater) இல் மயக்க நிலையிலிருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து ஊழியரும் அறுவை சிகிச்சை செய்து அதனை காணொளியாக எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஊழியர், மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலுடயேயே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் கூறியதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளதோடு, இந்த விவகாரம் தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிர் காத்துக் கொள்வதற்காகத்தான் மக்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர். ஆனால் அங்கு வரும் நோயாளிகளின் நலனை கருத்தில்கொள்ளாது இதுபோன்ற செயல்கள் நடப்பது ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதோடு, மக்களுக்கு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையும் குறைந்து போய்விடும்.

சிகிச்சை முறை குறித்து சரிவர விளக்கமில்லாத ஒரு ஊழியர், இவ்வாறு அறுவை சிகிச்சையில் ஈடுபட்டமை கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.