எதிர்வரும் வாரத்தில் நாடாளுமன்றம்: ஒரு நாள் மாத்திரமே கூடவுள்ளது

0
142

நாடாளுமன்றம் எதிர்வரும் வாரம் 21ஆம் திகதி புதன்கிழமை மாத்திரம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மொழி பதில் தேவைப்படும் கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2366/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவிப்பு மற்றும் கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் 2387/38 வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.