டொனால்ட் டிரம்புடன் இணைந்து நடனமாடும் வீடியோவை வெளியிட்ட எலான் மஸ்க்!

0
177

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் அவரும் டொனால்ட் டிரம்பும் நடனமாடுவது போன்ற AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த பதிவில் “எங்களை வெறுப்பவர்கள் இதனை AI என்று சொல்லக்கூடும்” என்று அவர் கிண்டலடித்துள்ளார். இந்த Ai காணொளியில் ‘பீ கீஸ்’ என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தின் ‘ஸ்டேயிங் அலைவ்’ என்ற பாடலுக்கு எலான் மஸ்க்கும் டொனால்ட் டிரம்பும் நடனம் ஆடுகின்றனர். 

சமீபத்தில் பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் மஸ்க் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.