தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர்கள் குழுவின் தலைவர் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கு கடந்த 12ஆம் திகதி சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை இணக்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.