‘அழகூரில் பூத்தவளே…’: ஷூட்டிங் முடித்த கையுடன் இரட்டை குழந்தைகளுடன் நயன்தாரா

0
145

நடிகை நயன்தாரா குழந்தைகளை இடுப்பில் தூக்கி கொண்டு நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. டாக்ஸிக் பட படப்பிடிப்புக்காக நயன்தாரா வெளி மாநிலம் சென்றுள்ளார்.

அங்கு தனது படப்பிடிப்புகள் முடிந்ததும் தான் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு அவர் வந்த போது எடுத்த வீடியோவை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

அதில் தன் இரட்டை குழந்தைகளையும் இடுப்பில் தூக்கிக் கொண்டு ஜாலியாக நயன்தாரா நடந்து வருகிறார். அதன் பின்னணியில் ”அழகூரில் பூத்தவளே…“ என்கிற பாடலும் ஒலிக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.