தடுமாறும் பொது கட்டமைப்பு: தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா..இல்லையா..!

0
72

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுகின்றார். இந்த நிலையில் தமிழ் வேட்பாளருக்கு பின்னால் இருக்கும் தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பு தான், சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள், மற்றும் எடுக்கப்படும் தீர்மானங்கள் என்பவை தொடர்பில் செயற்பட்டு வருகிறதாகவும் அதற்கான மக்கள் ஆணையாகவே பொது வேட்பாளர் என்பவர் கையாளப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு ஏற்றாப்போல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ்த் தேசிய சிவில் அமைப்புகளுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருந்தார்.

ஆனால் அந்த சந்திப்பிற்கு சிவில் தரப்புக்கள் செல்லவில்லை சில அரசியல் கட்சிகள் செல்லவில்லை. எனினும் ஒரு பகுதி அரசியல் தரப்பினர் மாத்திரம் அந்த சந்திப்பில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விவகாரத்திலும் ரணிலுடனான சந்திப்பில் கலந்தும் கொள்ளும் முடிவுகளை எடுக்கின்ற கட்சிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது இந்த பொது கட்டமைப்பில் இருந்து விலக்குவோம் அல்லது பொது கட்டமைப்பை கலைப்போம் என்றெல்லாம் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி தமிழ்த் தேசிய பொது கட்டமைப்பினரால் இந்த விவகாரத்திற்கே ஒருமித்த முடிவை எடுக்க முடியவில்லை. எவ்வாறு தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள்? பொது வேட்பாளருக்கு தமிழ் தேசியக் கட்சிகளின் ஆதரவு இருக்குமா? இல்லையா?