ஒலிம்பிக் 128 வருட வரலாற்றில் முதல் முறை தொடர்ச்சியாக 5 தங்கம்; கியூபா வீரரின் சாதனை

0
69

கியூபா மல்யுத்த ஜாம்பவான் மிஜான் லோபஸ் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்ற முதல் வீரராக என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

41 வயதாகும் இவர், நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் தொடரில் கிரேக்க-ரோமன் மல்யுத்தத்தில் பங்கேற்று, தன்னுடைய 5வது தங்கத்தை வென்றுள்ளார்.

இதற்கு முன்பாக தனிநபராக 4 முறை ஒலிம்பிக்கில் தங்கத்தை அமெரிக்காவின் நீச்சல் வீரரான மைக்கேல் ஃபெல்ப்ஸ், நீளம் தாண்டுதல் வீரரான கார்ல் லூயிஸ், வட்டு எறிதல் வீரரான ஆல்ஃபிரட் ஓர்டர் மற்றும் டென்மார்க் நாட்டை சேர்ந்த படகோட்ட வீரர் பால் எல்வ்ஸ்ட்ரோம் ஆகியோர் வென்றுள்ளார்கள்.

இவர்களை தற்போது முந்தியுள்ளார் மிஜான் லோபஸ். இறுதிப்போட்டியில் சிலி வீரர் யாஸ்மானி அகோஸ்டாவை 6-0 என தோற்கடித்து தனது 5-வது தங்கத்தை வென்று அசத்தியிருக்கிறார் மிஜான் லோபஸ்.

இவர் தொடர்ச்சியாக, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக், 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக், 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கத்தை வென்றவுடன் தனது ஓய்வையும் அறிவித்திருக்கிறார் மிஜான் லோபஸ்.