பங்களாதேஷில் தலைமை நீதிபதி பதவி விலகல்

0
99

மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்களினால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பங்காளதேசத்தின் தலைமை நீதிபதி ஒபைடுல் ஹசானும் பதவி விலகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

தமது பதவி விலகல் கடிதத்தை அந்நாட்டின் சட்டத்திற்கான அமைச்சிடம் ஒப்படைத்துள்ளார். மாணவ போராட்டத் தலைவர் ஒருவர் ஹசானை பதவி விலகக் கோரி இறுதி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இப்பதவி விலகலைத் தொடர்ந்து அதிபர் முஹமட் ஷாஹாபுடின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதி ஹசானை அடுத்து, உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டுப் பிரிவின் ஐந்து நீதிபதிகளும் பதவி விலகுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர் இயக்கத்திற்கும் அமலாக்க அதிகாரிகளுக்கும் பல நாள்களாக நீடித்த வந்த கருத்து வேறுபாட்டினால் வங்காளதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

மாணவர்கள், பொலிசார் மற்றும் அரசு ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறிய நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசானா பதவி விலகவும் வழிவகுத்தது. இந்நிலையில் அமைதிக்காக நோபல் பரிசு வென்ற முஹமட் யுனுஸ் அந்நாட்டின் இடைக்கால பிரதமராக பதிவியேற்றுள்ளார்.