பங்களாதேஷ் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மாணவர்களுக்கு இடைக்கால அரச பதவி

0
89

பங்களாதேஷ் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய ‘பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்’ இயக்கத்தின் இரு தலைவர்களான நஹீத் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் ஆகியோருக்கு புதிய இடைக்கால அரசாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நஹீத் இஸ்லாமுக்கு தபால், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சும், ஆசிப் மஹ்மூத்துக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.

பல்கலைக்கழக மாணவர்களான நஹீத் இஸ்லாம் மற்றும் ஆசிப் மஹ்மூத் 26 வயதுடையவர்கள் மற்றும் புதிய இடைக்கால அரசாங்கத்தின் இரண்டு இளைய ஆலோசகர்கள்.

மேலும், பங்களாதேஷின் புதிய இடைக்கால அரசாங்கத்தின் பிரதான ஆலோசகராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட கலாநிதி முஹம்மது யூனுஸ் புதிய அமைச்சரவையின் தலைவராக இருப்பார் என பங்களாதேஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.