பிரதமர் எதிர்ப்பு: ஜனாதிபதி கலந்து கொள்ளவிருந்த நிகழ்வு ஒத்திவைப்பு

0
109

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பில் நடைபெறவிருந்த தொழிற்சங்க மாநாட்டை திடீரென ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த மாநாடு நடைபெறவிருந்தது.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய சங்கங்களின் பிரதிநிதிகளின் மாநாடாக இதனை நடத்த ஆரம்பத்தில் உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர் அதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க மாநாடு போன்ற வகையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டமையால் பிரதமர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக மாநாட்டை இரத்து செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததாகவும் அடுத்த வாரம் மீண்டும் இந்த மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.