பகத் பாசிலுக்கு பிறந்தநாளுக்கு வேட்டையன் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் புதிய போஸ்டர்

0
73

இன்று பிறந்த நாள் கொண்டாடும் பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வேட்டையன் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. கண்களாலேயே நடிக்கும் ஒரு கலைஞன் பகத் பாசில்.

சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்றால் அழகான முகம், நல்ல தலைமுடி உள்ளிட்ட சில அடிப்படை விஷயங்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நல்ல நடிப்பை கொடுத்தால் மக்கள் நம்மை ஹீரோவாக பார்ப்பார்கள் என்பதை பல படங்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றும் தென்னிந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை நடிகர் பகத் பாசில் உருவாக்கியுள்ளார்.

தற்போது அவர் இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படக்குழு பிறந்தநாள் பரிசாக பகத் பாசிலுக்கு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வைலராக்கி வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.