ரணிலுக்கு பெருகும் ஆதரவு; ஆளும் தரப்பில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

0
182

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தான் ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். 

தன்னிடம் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகிக்கின்றார்.

இதேவேளை, ஆளும் தரப்பில் உள்ள பெரும்பாலானா அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.