நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று (07) விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த தீர்மானமானது சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தனவின் (Dinesh Gunawardena) முன்மொழிவின் படி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு விஜயதாச ராஜபக்ச (Vijayadasha Rajapakse), அந்த அமைச்சுப் பதவியை விட்டு விலகியமையே இதற்கு காரணமாகும்.
இந்த நிலையில், மக்கள் கூட்டணியின் சார்பில் விஜயதாச ராஜபக்ச வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.