தனது இரத்தத்தால் காதலனுக்கு கடிதம்; பாடசாலை மாணவி தற்கொலை!

0
113

தனது இரத்தத்தினால் காதலனுக்கு கடிதமொன்றினை எழுதி அனுப்பிவிட்டு 17 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் உயிர்மாய்த்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.

ரக்வானை – அலவத்தன்ன பிரதேசத்தை சேர்ந்த மாணவியே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். சம்பவத்தில் சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருந்த மாணவியே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

மாணவி இறப்பதற்கு முன்னர் கைகளை வெட்டி இரத்தத்தினால் கடிதமொன்றினை எழுதி இளைஞரொருவருக்கு அனுப்பியுள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவி அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்ததாகவும் உறவை நிறுத்துமாறு பெற்றோர் பலமுறை எச்சரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மாணவியின் பிரேதப் பரிசோதனை கஹவத்தை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளதுடன் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த மரணம் தற்கொலை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக கூறப்படும் நிலையில் மாணவியின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.