3-ஆம் உலக போர்; தேதியை அறிவித்த பிரபல ஜோதிடர்!

0
106

இந்தியாவின் நாஸ்ட்ரடாமஸ் என அறியப்படும் பிரபல ஜோதிடராக குஷால் குமார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போரை கணித்து பிரபலமடைந்தார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரையும் முன்கூட்டியே அறிவித்த அவர், இந்த போர்களால் உலகம் முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, உணவு தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டன.

கொரோனா தொற்றிலிருந்து உலகம் மீண்டு வந்த சூழலில் இந்த போர்கள் ஆப்பிரிக்கா போன்ற வளர்ச்சி அடையாத நாடுகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டன. இந்த நிலையில் முன்றாம் உலக போர் தொடக்கம் பற்றிய திகதியை ஜோதிடர் குஷால் அறிவித்துள்ளார்.

அவருடைய கணிப்பின்படி இந்த போர் இன்று அல்லது நாளை தொடங்கும் ஒகஸ்டு 4 அல்லது ஒகஸ்டு 5 ஆகிய இரு திகதிகளில் போர் தொடங்கும் என அவர் கூறினார்.

அவருடைய கணிப்பின்படி அந்த நாள் இன்று தொடங்குகிறது. ஆனால் அது மெய்யாவதற்கான சாத்தியங்கள் பின்னரே தெரியவரும். இதற்கு முன்பும் அவர் பல முறை 3-ம் உலக போர் தொடங்கும் திகதியை அறிவித்துள்ளார். இதன்படி நடப்பு ஆண்டின் ஜூன் 18-ம் திகதி போர் தொடங்கும் என கூறினார்.

ஆனால் அன்று எதுவும் நடக்கவில்லை. இதன்பின், புதிய திகதியை அறிவித்த அவர் ஜூலை 26 அல்லது ஜூலை 28 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு திகதியில் 3-ம் உலக போர் தொடங்கும் என கணிப்பு வெளியிட்டார்.

ஆனால் அதுவும் தவறாகி போனது இஸ்ரேல் மீது போரை தொடுக்க ஈரான் தலைவர் அலி காமினி உத்தரவிட்டு சில தினங்கள் ஆன நிலையில்பிரபல ஜோதிடரின் 3-ம் உலக போர் பற்றிய அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது