95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் வெளியீடு

0
44

இலஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் 95 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கை, பொது அதிகாரிகளிடையே வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் அதிகரிப்பதற்கான ஆணைக்குழுவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏனைய அரசியல்வாதிகளின் சொத்துப் பிரகடனங்கள் பெறப்படும் விபரங்களும் உரிய காலத்தில் பகிரங்கப்படுத்தப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.