2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அறுவரின் விபரம்

0
218

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதுவரை ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.