பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் – வைரலான புகைப்படம்: நாடு திரும்பும் இலங்கை போட்டியாளர்கள்

0
179

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்ந்து 5ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில், பல்லாயிரம் போட்டியாளர்கள் இதில் பங்குபற்றி வருகின்றனர்.

இதனடிப்படையில், நேற்று மாலை இடம்பெற்ற கடற் சறுக்கல் (surfing) போட்டியில் கலந்து கொண்ட வீரரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

காரணம் சர்ஃப்பிங் செய்த கையோடு அவர் நின்ற நிலையின் தன்மை அதாவது படம் எடுப்பதற்கான தோற்ற வெளிப்பாடு புகைப்படமாக்கப்பட்டுள்ளது.

யாரும் எதிர்பாராத அந்த தருணத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் மிகவும் துள்ளியமாகவும் அனைவரையும் கவரக்கூடிய விததித்திலும் கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.

இலங்கை போட்டியாளர்களின் நிலை

இதேவேளை, இலங்கையை பிரதிநிதிப்படுத்தி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இரு போட்டியாளர்கள் நாளை (01) நாடு திரும்பவுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய பூப்பந்து வீரர் வீரேன் நெட்டசிங்க, நீச்சல் வீரர் கைல் அபேசிங்க ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறி நாளை இலங்கைக்கு வரவுள்ளனர்.

பூப்பந்தாட்ட போட்டி வீரரான வீரேன் நெட்டசிங்க ஸ்பெயின் வீரருடன் மோதி தோல்வியடைந்தார். இதேவேளை, நேற்று நடைபெற்ற 100 மீற்றர் ப்ரீ ஸ்டைல் நீச்சல் ஆரம்ப சுற்றுப் போட்டியில் கலந்து கொண்ட கைல் அபேசிங்க போட்டியில் 8ஆவது இடத்தை பெற்று முதல் சுற்றுடனேயே வெளியேறினார்.

பதக்க பட்டியல் விபரம்

ஐந்து நாள் போட்டிகளின் முடிவில், இன்று பதக்க பட்டியலில் பாரிய மாற்றம் ஒன்று காணப்படுன்றது. அதனடிப்படையில், 7தங்கம், 2வெள்ளி, 4வெண்கலம் அடங்கலாக மொத்தம் 13 பதக்கங்களை பெற்று ஜப்பான் முதலிடத்திலும், 6 தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 14 பதக்கங்களை பெற்று சீனா இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றகன.

மேலும், 6 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் அடங்கலாக மொத்தம் 11 பதக்கங்களை பெற்று அவுஸ்த்ரேலியா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

மேலும் இதுவரை நடந்த அத்தனை போட்டிகளிலும் 26 பதக்கங்களை சுவீகரித்த ஐக்கிய அமெரிக்கா ஆறாவது இத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.