இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்; ஈரானில் ஒலித்த கோஷம்!

0
181

இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ [Death to Israel, Death to என்ற முழக்கங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியாக மசூத், பதவியேற்றுக்கொண்டார்.

ஈரான் ஜனாதிபதியாக இருந்த இப்ராஹிம் ரைசி கடந்த மே 17 ஆம் திகதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.

இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் திகதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் ஜனாதிபதியாக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

பதவியேற்பு விழாவில் ஒலித்த கோக்ஷம்

அதேவேளை பலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சினைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பதவியேற்பு விழாவில் காஸாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த ‘பலர் இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்’ [Death to Israel, Death to என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.

அதேவேளை ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியாஹ் ஈரான் நாட்டின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தபோது தெஹ்ரானில் அவர் தங்கியிருந்த வீட்டை குறிவைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.