எனது கனவுகளில் ஒன்று நனவாகிவிட்டது: வெற்றி குறித்து சமரி அதபத்து

0
171

ஆசியக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற காரணம் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியினர் ஒற்றுமையாக செயற்பட்டமையே என அவ் அணியின் தலைவி சமரி அதபத்து தெரிவித்தார்.

ஆசியக் கிண்ணத் தொடரில் வெற்றி பெற்றமைக்காக இலங்கை கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ எனது வாழ்வில் காணப்பட்ட ஒரு கனவு தான் நான் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற முன் தலைவியாக இலங்கைக்கு ஆசியக் கிண்ணம், உலகக் கிண்ணம் இரண்டையும் பெற்றுக் கொடுப்பது.

என்னுடைய இரு இலக்குகளில் ஒன்றை தற்போது நாட்டிற்காக பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இது ஒரு ஆரம்பம் மாத்திரமே. இதனுடனையே வாழ்ந்தால் எங்களுக்கு அடுத்த பெரிய கனவுக்கு செல்ல முடியாது.” எனத் தெரிவித்தார்.