இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2: தி ரூல். இத்திரைபடம் குறித்த அப்டேட் எப்போது வெளிவரும் என ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
படத்தின் க்ளைமேக்ஸிலிருந்து ஒரு க்ளிப் என கூறப்படுகிறது. ஆனால் அதில் நடிகரின் முகம் சரியாகத் தெரியவில்லை. உண்மையில் இந்த வீடியோ புஷ்பா 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இத்திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 06ஆம் திகதி வெளியிடப்படும்.