வீரர் விராட் கோலி இலங்கைக்கு வருகை

0
111

  இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இலங்கைக்கு வந்துள்ளார். இலங்கையில் நடைபெறும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

மேலும் ஷ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல் ஆகியோரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அபிஷேக் நாயர் தலைமையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஜூலை 27 முதல் 30 வரை 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் பல்லேகலையில் நடைபெறவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடர் ஜூலை 27 ஆம் திகதி தொடங்குகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 2-ம் தேதி ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது.