ஆசிய மகளிர் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் சமரியின் நெகிழ்ச்சி பதிவு!

0
153

தோல்விகளினால் சோர்ந்து போயுள்ள இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்ததில் தானும், இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியும் மகிழ்ச்சியடைவதாக இலங்கை அணித் தலைவர் சமரி அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த சமரி அத்தபத்து,

ஏராளமான பார்வையாளர்கள் வருகை தந்தது தனக்கும் அணிக்கும் மிகப்பெரிய பலமாக அமைந்தது அதுவே என்னால் கிண்ணத்தை எனது நாட்டிற்கு கொண்டு வர உதவியது.

வெகு தொலைவில் இருந்து மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் போட்டியை பார்க்க வந்ததாக நினைக்கிறேன். கிரிக்கெட் மூலம் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என சமரி கூறினார்.

ஆசிய மகளிர் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி தலைவர் சமரியின் நெகிழ்ச்சி பதிவு! | Asia Women S Cup Chamari Athapaththu Mother Happy

இதற்கிடையில், ஆசிய கிண்ணத்துடன் போட்டியை காண வந்திருந்த தனது தாயாரிடம் சமரி சென்றபோது, ​​இருவரும் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“எனது மகள் இப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. அப்பா இறந்த பிறகு அவளுக்கு எல்லாவற்றிலும் நான் உதவி செய்தேன்.

அவள் வீட்டில் தனியாக இருப்பாள் என்று நினைக்கவில்லை. அப்பா போய்விட்டார் என்று நினைக்கவில்லை. அவளை அவள் விருப்பத்துக்கு அனுமதித்தேன். இன்றும் அப்படித்தான்” என சமரியின் தாய் கூறினார்.