பலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இஸ்ரேல் இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலில் உள்ள சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்களின் தாக்குதலுக்குப் பிறகு முஸ்தபா கைது செய்யப்பட்டார்.
அதேசமயம் கடந்த 10 மாதங்களில் 18 பலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளின் காவலில் இருந்தபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது