இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவுகளுக்கு சீனா அனுமதி: தளர்த்தப்பட்ட தடைகள்

0
119

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நீண்டகாலமாக விதிக்கப்பட்ட தடைகளை அந்நாட்டு அரசாங்கம் நீக்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சீன சுங்க பொது நிர்வாக பிரதி அமைச்சர் (Vice Minister of General Administration of Customs) வாங் லிங்ஜூங் உள்ளிட்ட குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு வெளிப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நாட்டில் அன்னாசி விளையும் விதம் உள்ளிட்ட கோழிப்பண்ணை தொடர்பான தயாரிப்புகளின் தரம் சீன சந்தையில் உறுதிப்படுத்துவதற்காக பல நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் அதிகாரிகள் அதற்காக பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

மேலும் சீனா சந்தை வாய்ப்புகளுக்கு போதுமான கோழி மற்றும் முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய உற்பத்தியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.