நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டத்திற்கு கிடைத்த அனுமதி

0
94

நிகழ்நிலைக் காப்பு திருத்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கு பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கிணங்க குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது வலுவுடையதாக உள்ளது.

குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் துறைசார் நிபுணர்கள் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் பற்றிய திருத்தங்கள் முன்மொழியப்பட்டிருப்பினும், குழுநிலை விவாதத்தின் போது அவ்வாறான திருத்தங்களை சட்டமூலத்தில் உட்சேர்த்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டவில்லை.

அதற்கமைய, குறித்த திருத்தங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.