பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸை சந்தித்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில், அமெரிக்க ஜனாதிபதியாக இருக்க கூடிய பெண்ணுடன் இருப்பதாக கமலா ஹாரிஸை குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருந்தார். அதனையடுத்து கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட போதும் மல்லிகா ஷெராவத்தின் இந்த எக்ஸ் பதிவு வைரலானது.
வைரலான பதிவு
இந்நிலையில் தற்போது ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்பு அந்த எக்ஸ் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அத்துடன் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, ஜனாதிபதி வேட்பாளராக கமலா தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் வென்றால் அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற சாதனையை கமலா ஹாிஸ் படைப்பார்.