நீர்வீழ்ச்சி அருகே ரீல்ஸ்: 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

0
139

இந்தியா, மராட்டிய மாநிலம், ராய்காட் மாவட்டத்தில் கும்பே என்ற நீர்வீழ்ச்சியின் அருகில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஆன்வி கம்தார் என்ற பெண் சுமார் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவர் குறித்த இடத்தில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போதே பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் ஆறு மணித்தியால போராட்டத்தின் பின்னர் பெண்ணை மீட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சையளித்தபோதும் தவறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார். சமூக வலைத்தளத்தில் சுமார் இரண்டரை இலட்சத்துக்கும் அதிகமானோர் இவரை பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.