அனுபவும் முதிர்ச்சியும் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மீண்டும் ஆட்சியை வழங்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய லக்வனிதா முன்னணியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“எல்-போர்டு” அரசியல் கட்சிகளுக்கு எதிர்காலத்தில் நாட்டை ஆள்வதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால் தற்போது அனுபவமுள்ள ஜனாதிபதிக்கே ஆட்சியை மக்கள் வழங்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் உண்மையை பேசும் கட்சியாகும்.
ரணில் விக்ரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றப் பின் அரசியல் கட்சிகள் பொய் சொல்ல முடியாத சட்டமூலத்தைக் கூட நிறைவேற்றியுள்ளார்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
