T20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை இலவசமாகப் பார்வையிட வாய்ப்பு

0
110

2024ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியுடன் ஜூலை 19 ஆம் திகதி இருபதுக்கு 20 ஆசியக் கிண்ணப் போட்டி ஆரம்பமாகின்றது. மேலும் பங்களாதேஷிற்கு எதிரான இலங்கையின் முதல் போட்டி ஜூலை 20ஆம் திகதி நடைபெற உள்ளது.