அர்ச்சுனாவுக்கு எதிராக அநியாயத்துக்கு ஆதரவாக நீதிமன்றில் வாதிட்டாரா சட்டத்தரணி குருபரன்?

0
68

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஆதரா வைத்தியசாலை முன்னாள் பொறுப்பதிகாரி வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் பிரபல சட்டத்தரனி கு.குருபரன் வாதிட்டுள்ளார். சட்டத்தரனி கு.குருபரன் சைக்கிள் கட்சியின் செயற்பாட்டாளர் ஆவார்.

இவர் அர்ச்சுனா முகநூலில் வைத்தியர்களையும் வைத்திய உயர் அதிகாரிகளையும் குற்றம் சாட்டி பல பதிவுகளை வெளியிட்டுள்ளார். மேலும், சாவகச்சேரி வைத்தியசாலையில் நடைபெற்ற ஊழல்களையும் முறைகேடுகளையும் தனது பதிவுகளில் வெளியிட்டிருந்தார்.

அர்ச்சுனா எனும் தனிநபரின் தனிப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நடத்தைகளுக்கு அப்பால் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பொறுப்பு அதிகாரி என்ற முறையில் அருச்சுனா தெரவித்த கருத்துக்கள் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றது.

இந்த நிலையில் அருச்சுனா முகநூலில் பதிவுகள் இடுவது தாபணவிதிக்கோவைகளுக்கு முரணானது என குருபரன் அருச்சுனாவை குறிப்பிடாது தனது யூரியூப் சனலில் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

இது அர்ச்சுனாவை அச்சுறுத்தும் விதமாக இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் மற்றும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் குருபரனின் கருத்துக்கு எதிராக அருச்சுனா தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

குருபரனின் தம்பியும் குருபரனும் யுத்தம் நடக்கும் போது ஓடி ஒளிந்து திரிந்துவிட்டு தற்போது தமிழ்த்தேசியம் சார்பாக போலிச் சாயம் பூசி அலைகின்றார்கள் என்ற கருத்துப்பட பதிவு இட்டிருந்தார்.

இந்தப் பதிவுகளில் கடுப்பான குருபரன் தற்போது அர்ச்சுனாவுக்கு எதிராக அநியாயத்துக்கு ஆதரவாக நீதிமன்றில் ஆயராகியுள்ளதாக அர்ச்சுனாவுக்கு ஆதரவான நெட்டிசன்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள்.