என்னால் நடிக்க முடியாது என கட்டி அணைத்த பும்ரா; வெற்றிக்கு பின்னால் நிற்கும் தமிழச்சி

0
106

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான்.

பும்ராவின் அசுரத்தனமான வேகம் புத்திசாலித்தனம் ஆகியவைதான் இந்தியாவை இன்று கோப்பையை வெல்ல வைத்திருக்கிறது. பேட்டிங்கில் இந்தியா சில போட்டிகளில் தடுமாறினாலும், பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதை பும்ரா வென்று இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெறியாளர் சஞ்சனாவிடம் பேசிய பும்ரா, திடீரென்று போட்டியை முடிப்பதற்குள் என்னால் இதற்கு மேல் நடிக்க முடியாது போதும் உன்னுடைய பணி என்று சொல்லி அவரை கட்டிப்பிடித்தார்.

கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு அது யார் என்று நன்றாகவே தெரியும். ஆனால் கிரிக்கெட் பற்றி எந்த பரீட்சையம் இல்லாத ரசிகர்கள் இதைப் பார்த்தவுடன் கொஞ்சம் ஷாக் ஆனார்கள். அது பும்ராவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சஞ்சனா கணேஷ் ஒரு தமிழர் என்பது கூடுதல் பெருமை.

சென்னையை சேர்ந்த சஞ்சனா கணேஷ், கடந்த 2021 ஆம் ஆண்டு பும்ராவை திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிக்கு பிறகும் சஞ்சனாவிடம் பும்ரா பேசியபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

பும்ரா ஏற்கனவே இந்தியாவின் தலைசிறந்த பவுலராக இருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டு கொஞ்ச காலம் போட்டியிலிருந்து விலக நேர்ந்தது. எனினும் சஞ்சனாவின் உறுதுணையால் பும்ரா மீண்டும் டாப் பவுலராக உருவெடுத்து காயங்களில் இருந்து மீண்டு விளையாடினார்.

கடந்த 2022 டி20 உலக கோப்பைகள் எல்லாம் பும்ரா காயம் காரணமாக இடம் பெறவில்லை. அப்போது பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். எனினும் அப்போது சஞ்சனா தான் பும்ராவுக்கு துணையாக நின்றார்.

உன் கனவுக்கு துணை நிற்பேன் என்று கூறி பும்ராவின் வெற்றிக்கு காரணமாக தற்போது இருக்கிறார். இதனால் தான் பும்ரா தன் மனைவியை பார்த்தவுடன் அவருடைய பணிக்கும் மரியாதை கொடுத்துவிட்டு பிறகு கட்டி அணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.