கனடா பொலிஸ் துறையில் இணைந்த இந்திய இளம்பெண்! மகிழ்ச்சியில் குடும்பம்

0
227

இந்திய இளம்பெண்ணொருவர் கனடா பொலிஸ் துறையில் இணைந்துள்ளதாக அவரது பெற்றோர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கௌர், கனேடிய பொலிஸ் துறையில் இணைந்துள்ளார். அவர் தற்போது ரொரன்றோ பொலிஸ் துறையில் பணியாற்றி வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் மகள் கனடா பொலிஸ் துறையில் இணைந்துள்ளதால் தங்கள் கிராமமே பெருமையடைந்துள்ளதாக ஹர்பிரீத்தின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தங்கள் பிள்ளை கனடா பொலிசில் இணைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள சந்தோஷத்தை இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் கொண்டாடியுள்ளனர்.