நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான அஜித் ஷாலினி அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்த போது, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமாகி இருவருக்கும் ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். காண்பவர் பார்த்து கண் வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவரின் அன்பு இருக்கும்.
இந்தநிலையில், ஷாலினிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதாக தகவல் பரவியது.
இதையடுத்து இன்று ஷாலினிக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வைத்தியசாலையில் ஷாலினியுடன் அஜித் கையை பிடித்தபடி இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.