விருது வென்ற கையுடன் இலங்கை வீரர் மதீஷ பத்திரன அனிருத்துடன் எடுத்த செல்பி: காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

0
92

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பத்திரனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விருதை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ பத்திரனவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், தென்னிந்திய இசையமைப்பாளர் அனிருத்துடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.