இலங்கையில் மற்றொரு வளத்தின் மீது குறிவைத்த அதானி நிறுவனம்!

0
106

இலங்கையில் கடல்படுக்கையில் கனிமங்களை அகழும் திட்டத்தில் இந்தியாவின் அதானி குழுமம் ஈடுபடவுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த முயற்சிக்காக அதானி குழுமம் தைவானிய நிறுவனமான உமிகோர் தைவானுடன் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது.

பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இன்னும் இந்த இணக்கம் எட்டப்படவில்லை. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பு சுரங்க உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர் இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் மறைந்துள்ள பெறுமதிமிக்க கனிமங்களைக் கண்டறிவதற்காக இந்தியாவுடன் கூட்டுசேர்வது தொடர்பாக இலங்கையும் சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடற்கரையில் இருந்து 200 கடல் மைல்களுக்கு பிரத்மியேக பொருளாதார மண்டலத்தை பொருளாதார நோக்கங்களுக்காக செயற்படுத்த இலங்கைக்கு பிரத்மியேக உரிமை உள்ளது. எனவே மத்திய இந்தியப் பெருங்கடலில் கனிமங்களை தோண்டுவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.