தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரைச் நேரில் சந்தித்த நாகர்ஜுனா!: ட்ரெண்டாகும் வீடியோ

0
82

நடிகர் நாகர்ஜுனா, தனது பாதுகாவலர்களால் தள்ளிவிடப்பட்ட மாற்றுத்திறனாளி ரசிகரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த காணொளியில் அன்று நடந்ததில் உங்களுடைய தவறு எதுவும் இல்லை என நாகர்ஜுனா ரசிகரிடம் கூறுகின்றார். அவருடன் நன்றாக பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

இதேவேளை, முன்னதாக நடிகர் நாகர்ஜுனாவை சந்திக்க வந்த மாற்றுத் திறனாளி ரசிகரை அவரது பாதுகாவலர்கள் தள்ளிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்தச் செயலுக்கு நடிகர் நாகர்ஜுனா மன்னிப்பு கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.