கொழும்பு முழுவதும் இடம்பிடித்த ரணிலின் போஸ்டர்கள்!

0
99

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரச்சாரத்தின் ஒரு பகுதியே இந்த சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் இணைய பதாகைகள் மூலம் “ஆரஞ்சிய சுபய்” என முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். அதன்படி இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவிக்கவுள்ள ஜனாதிபதி ரணில் பொது வேட்பாளராக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் பொஹொட்டுவ மற்றும் சஜபவின் (SJB) ஒரு பிரிவினரின் ஆதரவைப் பெறுவார் எனவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

கொழும்பு முழுதும் இடம்பிடித்த ரணிலின் போஸ்ட்டர்கள்! | Ranil S Posters All Over Colombo

மேலும் இதை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் நாட்களில் பெருமளவானவர்கள், அமைச்சர்களாக ரணில் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.