இந்தோனேசியாவில் 22 வயது பெண் ஒருவர் உடற்பயிற்ச்சி செய்யும் டிரெட்மில்லில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பிலான வீடியோ x தளத்தில் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள போண்டியானக்கில் உள்ள ஜிம்மில் 22 வயது பெண் ஒருவர் டிரெட்மில்லில் ஓடும் போது, பெண் தடுமாறி பின் ஜன்னல் நோக்கி மெதுவாக நகர்ந்துள்ளார்.
ஜன்னல் திறந்திருந்ததால் கீழே விழும் முன் ஜன்னலைப் பிடிக்க முயன்றார். ஆனால் ஜிம் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த பெண் தனது சகோதரர் மற்றும் காதலனுடன் ஜிம்மிற்குச் சென்றதாகவும் காதலன் இரண்டாவது மாடியில் தன்னுடன் உடற்பயிற்சி செய்யச் சொன்னதாகவும் ஆனால் அந்தப் பெண் மாடிக்கு டிரெட்மில்லைப் பயன்படுத்த விரும்புவதாகக் கூறி, பரிதாபமாக விழுந்து இறந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.