விண்வெளியில் நடக்கும் பல சுவாரஷ்யமான தகவல்களை உடனுக்குடன் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் நமக்கு தெரியப்படுத்தி விடுகின்றது.
இந்நிலையில் தற்சமயம் ‘விண்வெளி உருளைக்கிழங்கு’ என்றொரு படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதாவது செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு துணை நிலவுகள் இருக்கின்றன.
அதில் பெரியது ஃபோபோஸ் என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நூறு வருடங்களுக்கும் ஒருமுறை ஆறு அடி தூரம் வரையில் செவ்வாய் கிரகத்தை நெருங்கும் இந்த போபோஸ் 50 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதும் அல்லது வளையமாக உடையும்.
இந்நிலையில் தற்சமயம் அந்த ஃபோபோஸ் கிரகத்தின் புகைப்படத்தை வெளியிட்ட நாசா, விண்வெளி உருளைக்கிழங்கு என்று பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம் இமேஜிங் அறிவியல் பரிசோதனை (HiRISE) ஊடாக எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.