மலேசியாவில் விபத்தில் உயிரிழந்த காதலர்களுக்கு நடந்த திருமணம்

0
147

மலேசியாவில் விபத்தில் உயிரிழந்த காதலர்களுக்கு நடந்த திருமண நிகழ்வு குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மலேசியாவைச் சேர்ந்த ஜிங்ஷன் என்ற நபர் லீ என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு மேலாகக் காதலித்து வந்த நிலையில் பெங்கொக்கிற்கு பயணம் மேற்கொள்ளவும் அதன்போது தனது காதலியான லீயை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் 24ஆம் திகதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஜிங்ஷன்- லீ சென்ற கார்  விபத்திற்குள்ளானதில் இருவரும் உயிரிழந்தனர்.

இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் விபத்தில் அவர்கள் உயிரிழந்தமை குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்தினர் ஒன்றுகூடி ஜிங்ஷன் – லீ இருவரும் மறுமையில் கணவன்- மனைவியாக ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையில் திருமண சடங்கை நடத்தி உள்ளனர்.

இறந்த இருவரின் புகைப்படங்களையும் வைத்ததுடன் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாகக் குறிப்பிட்டு திருமணம் நடத்தி உள்ளனர்.