டெல்லியில் கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்து தரைமட்டமான பழம்பெரும் பள்ளிவாசல்

0
245

உலகளாவிய ரீதியிலுள்ள இஸ்லாமிய மக்களால் நேற்று திங்கட்கிழமையன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லியில் உறுதியை இழந்த பள்ளிவாசலொன்றின் பெரும்பகுதியொன்று இடிந்து விழுந்துள்ளது.

பழைய டெல்லியில் குடிவாலா பகுதியில் அமைந்தள்ள இந்த சங்கமர்மர் என்ற பழைய பள்ளிவாசல் கட்டிடத்தில் நேற்று பகல் திடீரென விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதனை சுதாகரித்துக் கொண்ட பள்ளியிலிருந்த மக்கள் உடனே அங்கிருந்து வெளியேறியுள்ளனர். அங்குள்ள மக்கள் வெளியேறிய சிறிது நேரத்திலேயே பள்ளிவாசலின் ஒரு பகுதி மளமளவென்று சரிந்து தரைமட்டமாகியுள்ளது.

சரியான நேரத்தில் பள்ளிவாசலுக்குள்ளிருந்தவர்களும் அருகிலிருந்த கட்டிடங்களிலிருந்தவர்களும் வெளியேறியதால் உயிர் சேதங்களை தவிர்க்க முடிந்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள வீதி சற்று கீழிறங்கியதாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிவாசல் இடிந்துவிழும் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.