10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டம்!

0
109

இலங்கையில் காலநிலை வலயங்களுக்கு ஏற்ப 10 தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியா ஆகிய இடங்களில் தாவரவியல் பூங்காக்களை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

10 தாவரவியல் பூங்காக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை தாவரவியல் பூங்காக்கள் திட்டமிடப்பட்ட விதத்தில் காலி – அக்மீமன தாவரவியல் பூங்கா, வவுனியா தாவரவியல் பூங்கா, அம்பாறை, பொலன்னறுவை, தெனியா ஆகிய இடங்களை நாம் இனங்கண்டுள்ளதாகவும் பிர்டதமர் கூறினார்.

மேலும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் தாவரவியல் பூங்காக்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பிரமர் கூறினார்.