இலங்கையில் ISIS பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக கூறப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெரா என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் பேணிவந்துள்ளார்.

மேலும் இது தொடர்பான ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட்டை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
குறிப்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவினர் இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.



