தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்தான் இலங்கை தமிழ்ப் பெண் ஜனனி.
இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் நடிகர் விஜயின் லியோ படத்தில் நடித்து அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளனர். இதனையடுத்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இவ்வாறு இருக்கையில் ஜனனி சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுடன் உரையாடி வருகின்றார்.

சமீபத்தில் ஜனனி புகைப்படத்தினை வெளியிட்ட ரசிகர் ஒருவர் “பிடித்ததை மட்டும் பட்டியலிட்டால் முதல் இடத்தில் நீதான் வருவாய் என்று நினைத்தேன் பட்டியல் போட்டு பார்த்த பிறகுதான் தெரிந்தது பட்டியல் முழுக்க நீ மட்டும் தான் இருக்கிறாய் I love you my dear sweet heart“ என்று கவிதையுடன் காதலைக் கூறியுள்ளார்.
இதனை பார்த்த ஜனனி ஆர்மியினர் தங்களுக்குள் முட்டி மோதி கொள்வது மட்டும் இல்லை யார் அந்த நபர் என்று தேடி வருகின்றனர்.




